search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    அப்படிப்பட்ட வெற்றி எனக்கு தேவையேயில்லை- பென் ஸ்டோக்ஸ்
    X

    அப்படிப்பட்ட வெற்றி எனக்கு தேவையேயில்லை- பென் ஸ்டோக்ஸ்

    • எஞ்சிய 3 போட்டிகளிலும் எங்களால் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
    • ஒருபோதும் இப்படி செய்து வெற்றிகளை பெறுவதற்கு முயற்சி செய்திருக்கமாட்டேன்.

    இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் டெஸ்ட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி ஜூன் 28-ந் தேதி தொடங்கி ஜூலை 2-ந் தேதி வரை நடைபெற்றது.

    இந்த போட்டியில் இங்கிலாந்து அணி 45 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்ததால் ஆஸ்திரேலிய அணி சுழபமாக வெற்றி பெறும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. இதனையடுத்து பென் ஸ்டோக்ஸ் சிறப்பாக ஆடினார். அணியின் ஸ்கோர் 193 ரன்கள் இருந்த நிலையில் பேர்ஸ்டோவ் சர்ச்சை முறையில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து அதிரடி காட்டிய பென் ஸ்டோக்ஸ் 155 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனால் இங்கிலாந்து 43 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

    இந்நிலையில் ஒருபோதும் இப்படி செய்து வெற்றிகளை பெறுவதற்கு முயற்சி செய்திருக்கமாட்டேன் என பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து பென் ஸ்டோக்ஸ் கூறியதாவது:-

    ஆஸ்திரேலியா அணியினர் ரன் அவுட் கிளைம் செய்த போது நான் களத்தில் இருந்த நடுவரை பார்த்துக் கொண்டிருந்தேன். அவர் இல்லை என்றபடியே எனக்கு தலையசைத்து சொன்னார். இருப்பினும் வழக்கம் போல மூன்றாம் நடுவரிடம் முடிவுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. கடைசியில் அவுட் என்று வந்துவிட்டது.

    மூன்றாம் நடுவரின் முடிவை ஏற்றுக் கொள்ள வேண்டும். அதேநேரம் நான் பந்துவீச்சு பக்கம் இருந்திருந்தால் என்னுடைய கேப்டன்ஷியில் இத்தகைய செயல் செய்வேனா என்பது குறித்து சூழலுக்கு ஏற்ப முடிவு செய்திருப்பேன். ஒருபோதும் இப்படி செய்து வெற்றிகளை பெறுவதற்கு முயற்சி செய்திருக்கமாட்டேன். எல்லாம் விதிகளுக்கு உட்பட்டு நடந்திருப்பதாக பார்க்கிறேன்.

    இதே போன்ற சூழலில் 2019-ம் ஆண்டு ஹெட்டிங்லேயில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரா டெஸ்டில் அணிக்கு வெற்றி தேடித்தந்தேன். துரதிர்ஷ்டவசமாக இங்கு அது மாதிரி நடக்கவில்லை. இப்போது நாங்கள் தொடரில் 0-2 என்ற கணக்கில் பின்தங்கி இருக்கிறோம். இன்னும் 3 டெஸ்ட் போட்டிகள் உள்ளது. பாகிஸ்தானுக்கு எதிராக 3 டெஸ்டில் வெற்றி பெற்றோம். நியூசிலாந்துக்கு எதிராக 3-0 என்ற கணக்கில் வென்றோம். அதே போல் இந்த தொடரில் எஞ்சிய 3 போட்டிகளிலும் எங்களால் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×