search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    பேட்டிங் செய்வதற்கு சவாலான இடம் தென்ஆப்பிரிக்கா- டிராவிட்
    X

    பேட்டிங் செய்வதற்கு சவாலான இடம் தென்ஆப்பிரிக்கா- டிராவிட்

    • வேகப்பந்துவீச்சுக்கு உகந்த செஞ்சூரியன், ஜோகன்னஸ்பர்க் ஆடுகளங்களில் ரன் குவிப்பது சுலபமல்ல.
    • பேட்டிங் செய்வதற்கு சவாலான இடம் தென்ஆப்பிரிக்கா என்பதை புள்ளி விவரங்களே சொல்லும்.

    பெங்களூரு:

    இந்திய கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்க மண்ணில் மட்டும் இதுவரை டெஸ்ட் தொடரை வென்றதில்லை. இந்த மாத கடைசியில் அந்த நாட்டுக்கு எதிராக 2 டெஸ்ட் போட்டிகளில் இந்தியா விளையாட உள்ளது.

    இந்நிலையில் பேட்டிங் செய்வதற்கு சவாலான இடம் தென்ஆப்பிரிக்கா என்று இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து டிராவிட் கூறியதாவது:-

    பேட்டிங் செய்வதற்கு சவாலான இடம் தென்ஆப்பிரிக்கா என்பதை புள்ளி விவரங்களே சொல்லும். உலகிலேயே பேட்டிங் செய்வதற்கு கடினமான இடங்களில் ஒன்று தென்ஆப்பிரிக்கா. குறிப்பாக இங்குள்ள வேகப்பந்துவீச்சுக்கு உகந்த செஞ்சூரியன், ஜோகன்னஸ்பர்க் ஆடுகளங்களில் ரன் குவிப்பது சுலபமல்ல.

    ஒவ்வொரு பேட்ஸ்மேனும் இங்கு எப்படி விளையாட வேண்டும் என்ற திட்டமிடலுடன் வருவார்கள். அதற்கு ஏற்ப பயிற்சியும் மேற்கொள்வார்கள். எல்லோரும் ஒரே மாதிரி ஆடுவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. ஆனால் நமது வீரர்களுக்கு எப்படி ஆடினால் கைகொடுக்கும்.

    அதை எப்படி களத்தில் செயல்படுத்த வேண்டும் என்பதில் தெளிவான நிலையில் இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம். களத்தில் நிலைத்து நிற்க வாய்ப்பு அமைந்து விட்டால், அதை வெற்றிக்குரிய இன்னிங்சாக மாற்ற முயற்சிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×