என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கிரிக்கெட்

ஐபிஎல்லில் இருந்து ரோகித் சர்மா ஓய்வு எடுக்க வேண்டும்- சுனில் கவாஸ்கர்

- இப்போதைக்கு ரோகித் சர்மா இந்த சீசனில் இருந்து கொஞ்சம் பிரேக் எடுத்துக் கொள்ள வேண்டும்.
- இதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முழு உடற்தகுதியுடன் அவர் இருக்க முடியும்.
மும்பை:
நடப்பு ஐபிஎல் சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணியை ரோகித் வழிநடத்தி வருகிறார். இதுவரை இந்த சீசனில் 7 போட்டிகளில் விளையாடி உள்ள மும்பை அணி 3 வெற்றிகளைப் பதிவு செய்துள்ளது. 4 போட்டிகளில் தோல்வியைத் தழுவி உள்ளது. வலுவான பேட்டிங் லைன் அப் கொண்டுள்ள மும்பை அணிக்கு பவுலிங் தான் சங்கடம் கொடுத்து வருகிறது. 7 போட்டிகளில் விளையாடி உள்ள ரோகித் 181 ரன்கள் எடுத்துள்ளார்.
இந்நிலையில் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு உடல் தகுதியுடன் இருக்கும் வகையில் ரோகித் சர்மா கொஞ்சம் ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம் என தான் கருதுவதாக சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
மும்பை இந்தியன்ஸ் அணியின் பேட்டிங் ஆர்டரில் மாற்றங்கள் மேற்கொள்ள வேண்டியது அவசியம். இப்போதைக்கு ரோகித் சர்மா இந்த சீசனில் இருந்து கொஞ்சம் பிரேக் எடுத்துக் கொள்ள வேண்டும்.
இதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முழு உடற்தகுதியுடன் அவர் இருக்க முடியும். அவர் இந்த சீசனின் கடைசி சில போட்டிகளில் விளையாட மீண்டும் வரலாம். ஆனால், இப்போதைக்கு அவர் ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டியது தேவையான ஒன்று.
என சுனில் கவாஸ்கர் கூறினார்.