என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கிரிக்கெட்
X
ரசிகனாக டோனி வீட்டின் முன் நிற்கும் ஜடேஜா- வைரலாகும் புகைப்படம்
Byமாலை மலர்28 Feb 2024 3:46 PM GMT (Updated: 28 Feb 2024 4:33 PM GMT)
- இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கும் இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி மார்ச் 7-ந் தேதி தர்மசாலாவில் நடைபெறவுள்ளது.
- ராஞ்சியில் உள்ள டோனியின் வீட்டிற்கு இந்திய வீரரும், சிஎஸ்கே வீரருமான ரவீந்திர ஜடேஜா சென்றுள்ளார்.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற்று முடிந்தது. இப்போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, 5 போட்டிகள் கொண்ட தொடரையும் 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மார்ச் 7-ந் தேதி தர்மசாலாவில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் டோனியின் வீட்டிற்கு இந்திய வீரரும், சிஎஸ்கே வீரருமான ரவீந்திர ஜடேஜா சென்றுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த பதிவில் ஜாம்பவான் வீட்டின் முன் ஒரு ரசிகனாக போஸ் கொடுப்பது வேடிக்கையாக இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படம் தான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Next Story
×