என் மலர்
கிரிக்கெட் (Cricket)

ஆஸ்திரேலிய அணிக்கு உலகக் கோப்பையை வழங்கிய பிரதமர் மோடி
- இந்தியா முதலில் 240 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆனது.
- ஆஸ்திரேலியா 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து இலக்கை எட்டியது.
உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா 6-வது முறையாக 50 ஓவர் உலகக் கோப்பையை வென்றது.
போட்டி முடிந்த பிறகு பரிசு வழங்கும் விழா நடைபெற்றது. இரு அணி வீரர்களுக்கும் பரிசு வழங்கப்பட்டது. அதன்பின் ஆட்ட நாயகன், தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது.
பின்னர் இந்தியா பிரதமர் மோடி, ஆஸ்திரேலிய துணை பிரதமர் ஆகியோர் இணைந்து பேட் கம்மின்ஸிடம் கோப்பையை வழங்கினர். பின்னர், ஆஸ்திரேலிய வீரர்கள் மகிழ்ச்சியில் திளைத்தனர்.
Next Story






