search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    ஆப்கானிஸ்தானுக்கு 283 ரன்களை இலக்காக நிர்ணயித்தது பாகிஸ்தான்
    X

    ஆப்கானிஸ்தானுக்கு 283 ரன்களை இலக்காக நிர்ணயித்தது பாகிஸ்தான்

    • கேப்டன் பாபர் அசாம் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
    • ஆப்கானிஸ்தான் சார்பில் சிறப்பாக பந்து வீசிய நூர் அகமது மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்றைய போட்டியில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது.

    பாகிஸ்தான் அணியின் துவக்க வீரர்கள் அப்துல்லா ஷஃபிக் மற்றும் இமாம் உல் ஹக் முறையே 58 மற்றும் 17 ரன்களில் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த கேப்டன் பாபர் அசாம் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவர் 74 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்த நிலையில், இவருடன் ஆடிய முகமது ரிஸ்வான் 8 ரன்களில் ஆட்டமிழந்தார்.

    அடுத்த வந்த சௌத் ஷகீல் 25 ரன்களை குவித்தார். அதிரடியாக விளையாடிய இஃப்திகார் அகமது 27 பந்துகளில் 40 ரன்களை குவித்து கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார். இவருடன் சிறப்பாக விளையாடிய ஷதாப் கான் 40 ரன்களை குவித்தார்.

    இதன் மூலம் பாகிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 282 ரன்களை எடுத்தது. ஆப்கானிஸ்தான் சார்பில் சிறப்பாக பந்து வீசிய நூர் அகமது மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். நவீன் உல் ஹக், முகமது நபி, ஒமர்சாய் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    Next Story
    ×