என் மலர்
கிரிக்கெட் (Cricket)

சில நேரங்களில் சின்ன விஷயங்கள் கூட கஷ்டமாக இருக்கும்.. ரிஷப் பண்ட் உருக்கமான வீடியோ
- சில நேரங்களில் சின்ன விஷயங்கள் கூட கஷ்டமாக இருக்கும் என இந்த வீடியோவுக்கு தலைப்பிட்டுள்ளார்.
- இந்த வீடியோவுக்கு டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி நிர்வாகம் தொடருங்கள் ரிஷப் என கமெண்ட் செய்திருந்தது.
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் டெல்லி - டேராடூன் நெடுஞ்சாலையில் நடந்த கார் விபத்தில் படுகாயமடைந்தார். இதனால், ரிஷப் பண்ட் நடப்பு ஐபிஎல் தொடரில் விளையாடவில்லை.
ரிஷப் பண்ட் அவரது உடல் நலம் குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வபோது புகைப்படம் மற்றும் வீடியோவை பதிவிட்டு குணமடைந்து வருவதாக தெரிவித்து வந்தார்.
இந்நிலையில் அவர் படியில் நடந்து வருவது போல உள்ள வீடியோ பதிவிட்டுள்ளார். சில நேரங்களில் சின்ன விஷயங்கள் கூட கஷ்டமாக இருக்கும் என அதற்கு தலைப்பிட்டுள்ளார்.
இந்த வீடியோவுக்கு டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி நிர்வாகம் தொடருங்கள் ரிஷப் என கமெண்ட் செய்திருந்தது.
Next Story






