என் மலர்
கிரிக்கெட் (Cricket)

சகா, ஷுப்மன் கில் அதிரடி - லக்னோ வெற்றிபெற 228 ரன்களை நிர்ணயித்தது குஜராத்
- டாஸ் வென்ற லக்னோ பவுலிங் தேர்வு செய்தது.
- முதலில் ஆடிய குஜராத் அணி 227 ரன்களை குவித்தது.
அகமதாபாத்:
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் இன்றைய முதல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற லக்னோ பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, குஜராத் அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரரரனா விரித்திமான் சகா சூறாவளியாய் சுழற்றி அடித்தார்.
சிக்சர். பவுண்டரிகளாக விளாசினார். மற்றொரு வீரர் ஷுப்மன் கில்லும் நன்கு ஒத்துழைப்பு கொடுத்தார்.
முதல் விக்கெட்டுக்கு 142 ரன்கள் சேர்த்த நிலையில், சகா 43 பந்தில் 4 சிக்சர், 10 பவுண்டரி உள்பட 81 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
அடுத்து ஹர்திக் பாண்ட்யா களமிறங்கி 14 பந்தில் 25 ரன்கள் எடுத்தார்.
இறுதியில், குஜராத் அணி 20 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 227 ரன்களை எடுத்தது. ஷுப்மன் கில் 94 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.
இதையடுத்து, 228 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் லக்னோ அணி களமிறங்குகிறது.






