search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    இந்த அணுகுமுறையால் நெதர்லாந்துக்கு எதிராகக் கூட... பாகிஸ்தானை வெளுத்து வாங்கிய முன்னாள் வீரர்
    X

    இந்த அணுகுமுறையால் நெதர்லாந்துக்கு எதிராகக் கூட... பாகிஸ்தானை வெளுத்து வாங்கிய முன்னாள் வீரர்

    • 50 ஓவர்கள் விளையாடி 260 ரன்கள் வரை எடுத்திருக்கலாம்
    • விளையாட்டுக்கான திட்டமிடல் இல்லை. அணுகுமுறை இல்லை

    ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் மோசமான தோல்வியை சந்தித்தது. இந்தியா 356 ரன்கள் அடித்த நிலையில், பாகிஸ்தான் 128 ரன்னில் சுருண்டது.

    இந்த நிலையில் அந்த அணியின் முன்னாள் வீரர் கம்ரான் அக்மல் பாகிஸ்தான் அணியை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இந்த அணுகுமுறையுடன் விளையாடினால், நெதர்லாந்தை வெல்வதற்குக் கூட திணற வேண்டிய நிலை ஏற்படும் எனத் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து கம்ரான் அக்மல் கூறியதாவது:-

    நீங்கள் உலகக் கோப்பையில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த விரும்புகிறீர்களா?. ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் விளையாட விரும்புகிறீர்களா?. இந்தியாவுக்கு எதிராக விளையாடிய அணுகுமுறையை கடைபிடித்தால், நெதர்லாந்துக்கு எதிராகக்கூட திணற வேண்டிய நிலை இருக்கும்.

    நிர்வாகம் என்ன செய்து கொண்டிக்கிறது?. உங்களை முதலில் பந்து வீச்சை தேர்வு செய்ய சொன்னது யார்?. குறைந்த பட்சம் நிலைத்து நின்று விளையாடுமாறு வீரர்களிடம் வலியுறுத்தியிருக்கலாம். உங்களுடைய ரன்ரேட் மிகவும் மோசமாக உள்ளது. வங்காளதேசத்திற்கு எதிராக ஏறக்குறைய 190 ரன்களை 40 ஓவர்களில் சேஸிங் செய்தீர்கள்.

    சதாப், இப்திகார், சல்மான் அவுட்டான விதம். அவர்களிடம் முழு ஓவர்களையும் விளையாடுமாறு தெரிவித்திருக்கனும். அப்படி விளையாடியிருந்தால் 260 முதல் 280 ரன்கள் வந்திருக்கும். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தால் அவர்களிடம் இதுபோன்று கேள்விகள் கேட்க முடியாது என்று அவர்களுக்குத் தெரியும்.

    அங்கு விளையாட்டுக்கான திட்டமிடல் இல்லை. அணுகுமுறை இல்லை. எல்லோரும் விடுமுறைக்கு சென்றுள்ளனர். உங்களுடைய ஆட்டத்திறன் சிறந்த அணிக்கு எதிராக பள்ளிக்கூட சிறுவர்கள் போன்று இருந்தது என்பதை சொல்தற்கு வருந்துகிறேன்'' என்றார்.

    Next Story
    ×