search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    டி20 உலக கோப்பையில் இருந்து பும்ரா விலகல்
    X

    டி20 உலக கோப்பையில் இருந்து பும்ரா விலகல்

    • நேற்றைய ஆட்டத்தில் ஜஸ்பிரித் பும்ரா விளையாடாதது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை உண்டாக்கியது.
    • இதுவரை 60 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி உள்ள பும்ரா, 70 விக்கெட்டுகள் கைப்பற்றி உள்ளார்.

    புதுடெல்லி:

    இந்திய அணி வீரர் ஜஸ்பிரித் பும்ரா காயம் காரணமாக டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியிலிருந்து விலகியதாக தகவல் வெளியாகி உள்ளது. முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக 4 முதல் 6 மாதங்கள் வரை பும்ரா விளையாட முடியாது என தகவல் வெளியாகி உள்ளது.

    இந்திய அணி தற்போது தென் ஆப்பிரிக்க அணியுடனான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. திருவனந்தபுரத்தில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணியின் பவுலிங் மோசமாக இருப்பதாக சமீப காலமாக பல்வேறு விமர்சனங்கள் எழுந்த நிலையில், நேற்றைய போட்டியில் அதற்கு பதிலடி கொடுக்கப்பட்டது. ஏனென்றால் தென் ஆப்பிரிக்க அணியிடம் 106 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தனர்.

    என்ன தான் இந்திய அணி சிறப்பாக பந்துவீசிய போதும், ஜஸ்பிரித் பும்ரா விளையாடாதது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை உண்டாக்கியது. இந்த சூழ்நிலையில், அதாவது வரும் அக்டோபர் 6ம் தேதியன்று டி20 உலகக்கோப்பை தொடருக்காக இந்திய அணி ஆஸ்திரேலியா புறப்படுகிறது. இந்த சமயத்தில் பும்ரா விவகாரத்தில் டி20 உலககோப்பையில் பங்கேற்பாரா என ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்தது. இந்த நிலையில், டி20 உலகக்கோப்பை தொடரில் இருந்து காயம் காரணமாக இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா விலகியதாக தகவல் வெளியாகியிருக்கிறது. முதுகு வலி காரணமாக அவதிப்பட்டு வரும் பும்ரா, டி20 உலககோப்பை தொடரில் இருந்து விலகி உள்ளது கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இதுவரை 60 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி உள்ள பும்ரா, 70 விக்கெட்டுகள் கைப்பற்றி உள்ளார்.

    Next Story
    ×