search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    டி20-யில் 10 இந்திய கேப்டன்கள் சாதிக்காததை சாதித்து காட்டிய பும்ரா
    X

    டி20-யில் 10 இந்திய கேப்டன்கள் சாதிக்காததை சாதித்து காட்டிய பும்ரா

    • டிஎல்எஸ் முறைப்படி இந்திய அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    • இதனால் 3 போட்டிகள் கொண்ட தொடரில்இந்திய அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது.

    அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இதற்கான முதல் டி20 போட்டி நேற்று இந்திய நேரப்படி 7.30 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் களமிறங்கிய அயர்லாந்து அணி முதலில் சொதப்பினாலும் பின்னர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி கெளரவமான ரன்களை எடுத்தது. அந்த அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 139 ரன்கள் எடுத்தது. இந்திய தரப்பில் கேப்டன் பும்ரா, பிரதிஷ் கிருஷ்ணா, ரவி பிஷ்னோய் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

    இதனையடுத்து களமிறங்கிய இந்தியா 6.5 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 47 ரன்கள் இந்திய அணி எடுத்தபோது மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. மழை தொடர்ந்து பெய்ததால் போட்டியை மீண்டும் தொடங்க முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் டிஎல்எஸ் முறைப்படி இந்திய அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் 3 போட்டிகள் கொண்ட தொடரில்இந்திய அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது.

    இந்த போட்டியில் ஆட்டநாயகனாக பும்ரா தேர்வு செய்யப்பட்டார். இதன் மூலம் சர்வதேச டி20 போட்டியில் கேப்டனாக அறிமுகமான முதல் ஆட்டத்திலேயே, ஆட்ட நாயகன் விருதை வென்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பும்ரா பெற்றுள்ளார்.

    இந்திய டி20 அணியின் கேப்டனாக சேவாக், டோனி, ரெய்னா, ரகானே, விராட் கோலி, ரோகித் சர்மா, தவான், ரிஷப் பண்ட், கேஎல் ராகுல், பாண்ட்யா ஆகியோர் செயல்பட்டுள்ளனர். ஆனால் இந்த சாதனையை பும்ரா மட்டுமே நிகழ்த்தியுள்ளார்.

    Next Story
    ×