search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    ஐதராபாத் அணி 270 ரன்களுக்கு மேல் அடிக்கும் என நான் நினைக்கவில்லை: ஹர்திக் பாண்ட்யா
    X

    ஐதராபாத் அணி 270 ரன்களுக்கு மேல் அடிக்கும் என நான் நினைக்கவில்லை: ஹர்திக் பாண்ட்யா

    • முதல் இன்னிங்சில் 270 ரன்கள் என்ற திட்டத்துடன் விளையாட முடியாது.
    • மும்பை அணிக்கு தேவைப்படும்போதெல்லாம் பவுண்டரி, சிக்சர்கள் கிடைத்தன- கம்மின்ஸ்

    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி மும்பை இந்தியன்ஸ்க்கு எதிராக 277 ரன்கள் குவித்து சாதனை படைத்தது. பின்னர் 278 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 246 ரன்கள் அடித்தது. இதனால் ஐதராபாத் அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    போட்டி முடிந்த பிறகு சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி கேப்டன் பேட் கம்மின்ஸ் கூறியதாவது:-

    இது பைத்தியக்காரத்தனமாக இருந்தது. இல்லையா என்ன? என கேட்டுக்கொண்டார். நாங்கள் பந்து வீசி முடிக்கும் வரை, போட்டி மிகவும் நெருக்கமானதாகவே சென்னறது. மும்பை அணிக்கு தேவைப்படும்போதெல்லாம் பவுண்டரி, சிக்சர்கள் கிடைத்தது. பந்து மைதானத்தை சுற்றிக் கொண்டே இருந்தது. ஆனால் நாங்கள் இறுதியாக சிறப்பான வகையில் ஆட்டத்தை முடித்தோம்.

    அபிஷேக் சர்மா ஆட்டம் உண்மையிலேயே ஈர்க்கும் வகையில் இருந்தது. நீங்கள் ஐபிஎல் தொடரில் நெருக்கடியில் விளையாட வேண்டியிருக்கும். ஆனால், அவர் அதிகப்படியான சுதந்திரத்துடன் விளையாடுகிறார். முதல் இன்னிங்சில் 270 ரன்கள் என்ற திட்டத்துடன் விளையாட முடியாது. ஆனால், நாங்கள் நேர்மறையான, ஆக்ரோசமான ஆட்டத்துடன் போட்டியை எடுத்துச் செல்ல விரும்பினோம். சொந்த மைதானத்தில் சூழ்நிலை அற்புதமாக இருந்தது. நம்பமுடியாத வகையில் ரசிகர்களின் ஆரவாரம் இருந்தது.

    இவ்வாறு பேட் கம்மின்ஸ் தெரிவித்தார்.

    தோல்வி குறித்து மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யா கூறியதாவது:-

    டாஸ் சுண்டப்படும்போது சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 277 ரன்கள் அடிக்கும் என்று உண்மையிலான நினைக்கவில்லை. ஆடுகளம் சிறப்பாக இருந்தது. 277 என்பது விசயம் அல்ல, நீங்கள் மோசமாக அல்லது நன்றாக பந்து வீசினாலும், எதிரணி பேட்ஸ்மேன்கள் அதிக ரன்கள் குவித்தால், அவர்கள் சிறப்பாக பேட்டிங் செய்தார்கள், அவ்வளவுதான். அவர்களின் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். 500 ரன்களுக்கு மேல் அடிக்கப்பட்ட நிலையில், ஆடுகளம் பேட்ஸ்மேன்களுக்கு ஆதரவாக இருக்கும்போது, பந்து வீசுவது மிகவும் கஷ்டம்.

    நாங்கள் பந்து வீச்சு மற்றும் பேட்டிங்கில் சில விசயங்கள் செய்திருக்கனும். நாங்கள் இளம் பந்து வீச்சாளர்களை கொண்டுள்ளோம். பாடம் கற்றுக் கொள்வோம்.

    இவ்வாறு ஹர்திப் பாண்ட்யா தெரிவித்தார்.

    Next Story
    ×