search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    டுபிளசிசுடன் விளையாடியது டிவில்லியர்சை நினைவுப்படுத்தியது- விராட் கோலி நெகிழ்ச்சி
    X

    டுபிளசிசுடன் விளையாடியது டிவில்லியர்சை நினைவுப்படுத்தியது- விராட் கோலி நெகிழ்ச்சி

    • வித்தியாசமான ஷாட்டுகளை ஆடி எனது விக்கெட்டை இழக்க விரும்பவில்லை.
    • நெருக்கடியான சூழலில் விளையாடி வெற்றி பெறுவது எனக்கு பெருமை.

    ஐதராபாத்:

    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று ஐதராபாத்தில் நடந்த 65-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத் அணியை வீழ்த்தியது. ஐதராபாத் அணி நிர்ணயித்த 187 ரன் இலக்கை பெங்களூரு 19.2 ஓவரில் 2 விக்கெட்டை இழந்து எடுத்தது.

    விராட் கோலி சதம் அடித்தார். அவர் 63 பந்தில் 100 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இதில் 12 பவுண்டரி, 4 சிக்சர் அடங்கும். இந்த வெற்றி மூலம் பெங்களூரு அணி பிளே-ஆப் சுற்று வாய்ப்பில் நீடிக்கிறது.


    ஆட்ட நாயகன் விருது பெற்ற விராட் கோலி கூறியதாவது:-

    முக்கியமான ஆட்டத்தில் நான் சதம் அடித்து இருப்பது எனக்கு மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கிறது. ஆடுகளத்தில் பந்து கொஞ்சம் நின்று வந்தது. நாங்கள் நல்ல தொடக்கத்தை அளிக்க விரும்பினோம். ஆனால் விக்கெட் இழப்பின்றி 172 ரன்கள் எடுப்போம் என்று எதிர் பார்க்கவில்லை.

    டுபிளசிஸ் வேறு ஒரு அளவில் சிறப்பாக விளையாடி வருகிறார். நான் சில போட்டிகளில் சரியாக விளையாடவில்லை. வலைப்பயிற்சியில் பந்துகளை அடிப்பதுபோல் போட்டியில் அடிக்கவில்லை.

    இந்த ஆட்டத்தில் முதல் பந்திலேயே அடித்து ஆட வேண்டும் என்று நினைத்தேன். இன்றைய ஆட்டத்தில் அணிக்காக வெற்றியை தேடி கொடுத்தது மகிழ்ச்சி அளிக்கிறது. நான் எப்போதும் ரன் கணக்குக்கு முக்கியத்துவம் தருவதில்லை.

    சில சமயங்களில் பெரிய இன்னிங்சை விளையாடியதற்கும் பெருமைப்பட்டு கொள்ளமாட்டேன். நெருக்கடியான சூழலில் விளையாடி வெற்றி பெறுவது எனக்கு பெருமை.

    நான் வித்தியாசமான ஷாட்டுகளை ஆட விரும்பவில்லை. ஒரு ஆண்டில் 12 மாதங்களிலும் விளையாடுகிறோம். இதில் வித்தியாசமான ஷாட்டுகளை ஆடி எனது விக்கெட்டை இழக்க விரும்பவில்லை. எப்போதுமே எனது கிரிக்கெட் யுக்திகளுக்கு உண்மையாக இருந்து அணிக்காக விளையாடுவதில் பெருமை கொள்கிறேன்.

    டுபிளசிசும் நானும் விளையாடுவதை பார்க்கும் போது டிவில்லியர்சும் நானும் விளையாடுவது போல் எனக்கு தெரிகிறது.

    இங்கு (ஐதராபாத்) ரசிகர்கள் எங்களுக்கு அதிக ஆதரவு அளித்தனர். சொந்த மண்ணில் விளையாடியது போல் இருந்தது. நான் விளையாடும் போது மக்கள் சந்தோஷப்படுவதை பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×