search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    ராகுல் அரை சதம்: 2-ம் நாள் உணவு இடைவேளை வரை இந்தியா 222/3
    X

    ராகுல் அரை சதம்: 2-ம் நாள் உணவு இடைவேளை வரை இந்தியா 222/3

    • ராகுல் - ஷ்ரேயாஸ் ஜோடி 50 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை கடந்தது.
    • கில் 23 ரன்களில் ஆட்டமிழந்தார்.

    இந்தியாவுக்கு வந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. இதன் முதலாவது டெஸ்ட் ஐதராபாத்தில் நேற்று தொடங்கியது. இந்திய அணியில் 3-வது சுழற்பந்து வீச்சாளர் இடத்துக்கு குல்தீப் யாதவுக்கு பதிலாக அக்ஷர் பட்டேல் சேர்க்கப்பட்டார். 'டாஸ்' ஜெயித்த இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.

    அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணி 246 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதனைதொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி முதல் நாள் முடிவில் 1 விக்கெட்டை இழந்து 119 ரன்கள் எடுத்தது.

    இந்நிலையில் 2-வது நாள் இன்று தொடங்கியது. முதல் ஓவரை ரூட் வீசினார். 2-வது பந்தை பவுண்டரி விரட்டிய ஜெய்ஸ்வால் 4-வது பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்த வந்த கேஎல் ராகுல் 0 ரன்னில் கொடுத்த கேட்ச் வாய்ப்பை கீப்பர் நழுவவிட்டார்.

    கில் - ராகுல் ஜோடி நிதானமாக விளையாடி ரன்களை கணிசமாக உயர்த்தினர். பொறுமையாக விளையாடி வந்த கில் பவுண்டரி விளாச நினைத்து கேட்ச் கொடுத்து 23 (66) ரன்னில் அவுட் ஆனார்.

    இதனையடுத்து ராகுல் - ஷ்ரேயாஸ் ஜோடி இங்கிலாந்தின் பந்து வீச்சை சிறப்பாக எதிர் கொண்டு விளையாடினர். அவ்வபோது பவுண்டரிகளும் பறக்க விட்ட இந்த ஜோடி 50 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை கடந்தது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேஎல் ராகுல் அரை சதம் அடித்தார்.

    இதனால் 2-ம் நாள் மதிய உணவு இடைவெளி வரை இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 222 ரன்கள் எடுத்துள்ளது. ஷ்ரேயாஸ் 34 ரன்னிலும் கேஎல் ராகுல் 55 ரன்னிலும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    Next Story
    ×