search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    அரை சதம் விளாசிய ஷ்ரேயாஸ்- ஆஸ்திரேலியாவுக்கு 161 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்தியா
    X

    அரை சதம் விளாசிய ஷ்ரேயாஸ்- ஆஸ்திரேலியாவுக்கு 161 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்தியா

    • சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷ்ரேயாஸ் 53 ரன்னில் அவுட் ஆனார்.
    • ஆஸ்திரேலியா அணி தரப்பில் ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப், பென் துவர்ஷுயிஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான கடைசி டி20 போட்டி பெங்களூரு சின்னசாமி ஸ்டேயத்தில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜெய்வால் - ருதுராஜ் களமிறங்கினர். வழக்கம் போல அதிரடி காட்டி பவர்பிளேயிலேயே விக்கெட்டை இழந்தார் ஜெய்வால். அவர் 15 பந்துகளில் 21 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்த வந்த சூர்யகுமார் யாதவ் 5, ரிங்கு சிங் 6 என வெளியேறினார்.

    ஒரு கட்டத்தில் 55 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி திணறியது. இதனையடுத்து ஷ்ரேயாஸ் மற்றும் ஜிதேஷ் ஜோடி சேர்ந்து ரன்களை குவித்தனர். அதிரடி காட்டிய ஜித்தேஷ் 24 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து வந்த அக்சர் படேல் 31 ரன்களில் ஆட்டமிழந்தார்.

    ஒரு பக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஷ்ரேயாஸ் அரை சதம் விளாசி 53 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியில் இந்தியா அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 160 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலியா அணி தரப்பில் ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப், பென் துவர்ஷுயிஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    Next Story
    ×