search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    குல்தீப், சிராஜ் அபார பந்துவீச்சு: 215 ரன்களில் இலங்கை ஆல் அவுட்

    • இலங்கை அணியில் அதிகபட்சமாக நுவனிது பெர்னாண்டோ 50 ரன்கள் சேர்த்தார்.
    • இந்தியா தரப்பில் குல்தீப் யாதவ், சிராஜ் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

    இந்தியா, இலங்கை அணிகள் மோதும் இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி, கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

    துவக்க வீரர் அவிஸ்கா பெர்னாண்டே 20 ரன்களில் வெளியேறிய நிலையில், நுவனிது பெர்னாண்டோ-குஷால் மெண்டிஸ் ஜோடி நிதானமாக விளையாடி ரன் சேர்த்தது. அணியின் ஸ்கோர் 102 ஆக இருந்தபோது இந்த ஜோடி பிரிந்தது. மெண்டிஸ் 34 ரன்கள் எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்தார்.

    அடுத்து வந்த தனஞ்செயா டக் அவுட் ஆனார். நுவனிது பெர்னாண்டோ அரை சதம் அடித்த நிலையில் ஆட்டமிழந்தார். அதன்பின்னரும் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் சரிய, இலங்கை அணி 215 ரன்களில் ஆல் அவுட் ஆனது.

    இந்தியா தரப்பில் சிறப்பாக பந்துவீசிய குல்தீப் யாதவ், சிராஜ் தலா 3 விக்கெட் வீழ்த்தினர். உம்ரான் மாலிக் 2 விக்கெட் எடுத்தார்.

    இதையடுத்து 216 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்குகிறது.

    Next Story
    ×