search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    மழை குறுக்கிட்டதால் இந்தியா- பாகிஸ்தான் ஆட்டம் நிறுத்தம்
    X

    மழை குறுக்கிட்டதால் இந்தியா- பாகிஸ்தான் ஆட்டம் நிறுத்தம்

    • ரோகித் சர்மா மற்றும் ஷூப்மன் கில் ஆகியோர் அரை சதம் எடுத்து தலா 56 ரன்கள் மற்றும் 58 ரன்களில் அடுத்தடுத்து அவுட்டாகினர்.
    • விராட் கோலியும் கே.எல்.ராகுலும் விளையாடி வருகின்றனர்.

    ஆசியக்கோப்பை 2023 தொடரின், இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள பிரேமதாசா ஸ்டேடியத்தில் இன்று நடக்கும் சூப்பர்4 சுற்றின் 3-வது ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    இந்த ஆட்டத்திற்கான டாஸ் போடப்பட்டது. இதில், பாகிஸ்தான் அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது.

    இதைதொடர்ந்து, இந்த ஆட்டத்தில் இந்திய அணி பேட்டிங் செய்வதற்காக களமிறங்கியது.

    இந்திய அணி சார்பில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய ரோகித் சர்மா மற்றும் ஷூப்மன் கில் ஆகியோர் அரை சதம் எடுத்து தலா 56 ரன்கள் மற்றும் 58 ரன்களில் அடுத்தடுத்து அவுட்டாகினர்.

    இதைதொடர்ந்து, விராட் கோலியும் கே.எல்.ராகுலும் விளையாடி வருகின்றனர்.

    இதில், விராட் கோலி 16 பந்துகளில் 8 ரன்களும், கே.எல்.ராகுல் 28 பந்துகளில் 17 ரன்களும் எடுத்து விளையாடி வந்தனர்.

    இந்நிலையில், 24.1 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்கள் எடுத்த நிலையில் மழையால் ஆட்டம் தடைப்பட்டது.

    போட்டி நடைபெறும் கொழும்பில் இன்று 90 சதவீதம் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக அங்குள்ள வானிலை மையம் தெரிவித்தது. இதனால் இந்த ஆட்டம் பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

    இதனால் சூப்பர்4 சுற்றில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டு ரத்தானால் மாற்று தினமான (ரிசர்வ் டே) அடுத்த நாளில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×