search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    சூர்யகுமார் பாகிஸ்தானில் இருந்திருந்தால் அணியில் வாய்ப்பே கிடைத்திருக்காது- சல்மான் பட்
    X

    சூர்யகுமார் பாகிஸ்தானில் இருந்திருந்தால் அணியில் வாய்ப்பே கிடைத்திருக்காது- சல்மான் பட்

    • ஒருவேளை அவர் பாகிஸ்தானியராக இருந்திருந்தால், 30 வயதுக்கு மேல் பாகிஸ்தான் கிரிக்கெட்டில் ஆட வாய்ப்பே பெற்றிருக்கமாட்டார்.
    • ரமீஸ் ராஜா இருந்தபோது 30 வயதுக்கு மேல் எந்த வீரரும் அறிமுகமாக முடியாது என்ற விதியை வகுத்திருந்தார்.

    சர்வதேச டி20 கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரராக சூர்யகுமார் யாதவ் வெறும் ஓராண்டில் வளர்ந்துள்ளார். மைதானத்தின் அனைத்து திசைகளிலும் பந்தை பறக்கவிடக்கூடிய வீரர் என்பதால் டிவில்லியர்ஸுக்கு பின் மிஸ்டர் 360 என அழைக்கப்படுபவர் சூர்யகுமார் யாதவ்.

    இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் கடைசி ஆட்டத்தில் சதம் விளாசி ஆட்டத்தின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார். மேலும் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக 1500 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டிய வீரர் என்ற சாதனையையும் படைத்தார். டி20 கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் ரோகித் சர்மாவுக்கு (4 சதங்கள்) அடுத்து 2-வது இடத்தில் இவர் உள்ளார். விரைவில் ரோகித் சர்மாவின் சாதனையை முறியடித்துவிடுவார் என எதிர் பார்க்கபடுகிறது.

    30 வயதில் இந்திய அணியில் முதல் முறையாக ஆட வாய்ப்பு பெற்றார். அதன்பின்னர் இந்த 2 ஆண்டில் மிகப்பெரிய வீரராக வளர்ந்திருக்கிறார்.

    இந்நிலையில், சூர்யகுமார் யாதவை வைத்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தையும், அமைப்பையும் சல்மான் பட் கடுமையாக விமர்சித்துள்ளார்.

    இதுகுறித்து சல்மான் பட் பேசியதாவது:-

    சூர்யகுமார் யாதவ் 30 வயதுக்கு மேல் தான் சர்வதேச கிரிக்கெட்டில் ஆடவே தொடங்கினார் என படித்திருக்கிறேன். நல்வாய்ப்பாக சூர்யகுமார் யாதவ் இந்தியராக பிறந்துவிட்டார். ஒருவேளை அவர் பாகிஸ்தானியராக இருந்திருந்தால், 30 வயதுக்கு மேல் பாகிஸ்தான் கிரிக்கெட்டில் ஆட வாய்ப்பே பெற்றிருக்கமாட்டார்.

    பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவராக ரமீஸ் ராஜா இருந்தபோது 30 வயதுக்கு மேல் எந்த வீரரும் அறிமுகமாக முடியாது என்ற விதியை வகுத்திருந்தார்.

    என்று சல்மான் பட் பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பை கடுமையாக விமர்சித்தார்.

    Next Story
    ×