என் மலர்
கிரிக்கெட் (Cricket)

ஒவ்வொரு வீரருக்கும் போதுமான வாய்ப்பு வழங்கப்படும்- கேப்டன் ஹர்திக் பாண்ட்யா சொல்கிறார்
- ஆடுகளத்தின் தன்மை, வீரர்களின் திறமை ஆகியவற்றுக்கு முன்னுரிமை கொடுத்து வீரர்கள் தேர்வு இருக்கும்.
- 2022-ம் ஆண்டு எனக்கு மேஜிக்கல் ஆண்டாக இருந்தது.
மும்பை:
இலங்கை கிரிக்கெட் அணி மூன்று 20 ஆட்டம் மறறும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது.
இந்தியா-இலங்கை அணிகள் மோதும் முதல் 20 ஓவர் ஆட்டம் மும்பையில் இன்று நடக்கிறது. இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த போட்டி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
இலங்கைக்கு எதிரான 20 ஓவர் தொடருக்கு ஹர்திக் பாண்ட்யா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.கேப்டன் ரோகித் சர்மா, முன்னாள் கேப்டன் விராட் கோலி உள்ளிட்டோருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஒவ்வொரு வீரருக்கும் போதுான வாய்ப்பு வழங்கப்படும் என்று கேப்டன் ஹர்திக் பாண்ட்யா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
2022-ம் ஆண்டு எனக்கு மேஜிக்கல் ஆண்டாக இருந்தது. ஒரு சிறிய ஓய்வை எடுத்துக் கொண்டு எனது உடல் தகுதியை மேம்படுத்திக் கொண்டு அணிக்கு திரும்பி உள்ளேன்.
20 ஓவர் உலக கோப்பையை வெல்ல நினைத்தோம். ஆனால் கடந்த ஆண்டு அது நடக்காமல் போனது. 2023-ல் நடைபெறும் உலக கோப்பையை வெல்வது தான் எனது புத்தாண்டு தீர்மானமாகும்.
எதிர்காலத்தில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும். ஒவ்வொரு வீரருக்கும் போதுமான வாய்ப்பை வழங்குவோம். ஆடுகளத்தின் தன்மை, வீரர்களின் திறமை ஆகியவற்றுக்கு முன்னுரிமை கொடுத்து வீரர்கள் தேர்வு இருக்கும்.
விபத்தில் காயம் அடைந்த ரிஷப்பண்ட் வேகமாக குணமடைய வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன். இந்த விபத்து துரதிர்ஷ்டவசமானது. அவருக்காக அணியில் உள்ள அனைத்து வீரர்களும் விரைவில் குணமடைய பிரார்த்தி வருகிறார்கள்.
இவ்வாறு ஹர்திக் பாண்ட்யா கூறியுள்ளார்.
இனிவரும் காலங்களில் ஹர்திக் பாண்ட்யா 20 ஓவர் அணிக்கு கேப்டனாக இருப்பார். ரோகித் சர்மா டெஸ்ட், ஒருநாள் போட்டிக்கு கேப்டனாக தொடர்ந்து நீடிப்பார்.






