என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கிரிக்கெட்

ஐபிஎல் 2023: டெல்லி அணியின் புதிய கேப்டனாக வார்னர் நியமனம்

- ரிஷப் பண்டுக்கு விபத்து ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருவதால் ஐபிஎல் தொடரில் விளையாட முடியவில்லை.
- வார்னர் ஏற்கனவே ஐபிஎல்-ல் ஐதராபாத் அணியை வழிநடத்தி கோப்பை வென்றுக்கொடுத்த அனுபவம் இருக்கிறது.
மும்பை:
2023-ம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான அட்டவணை சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதன்படி வரும் மார்ச் 31-ம் தேதியன்று அகமதாபாத்தில் லீக் போட்டிகள் தொடங்குகின்றன. இறுதிப்போட்டி மே 28-ம் தேதியன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக அனைத்து அணிகளும் முதற்கட்ட பயிற்சிகளுக்காக ஏற்பாடு செய்து வருகின்றன. நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணி ஏற்கனவே அகமதாபாத்தில் பயிற்சி முகாமை தொடங்கிவிட்டது.
அனைத்து அணிகளும் வீரர்களை தயார்படுத்த தொடங்கிய சூழலில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி கேப்டனையே அறிவிக்காமல் இருந்தது. இந்நிலையில் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
கேப்டன் ரிஷப் பண்ட்-க்கு கடந்த மாதம் கார் விபத்து ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருவதால் ஐபிஎல் தொடரில் விளையாட முடியவில்லை. எனவே அணியை வெற்றிகரமாக வழிநடத்தி செல்ல டேவிட் வார்னரை போன்ற அனுபவ வீரரை தேர்வு செய்துள்ளனர்.
வார்னர் ஏற்கனவே ஐபிஎல்-ல் ஐதராபாத் அணியை வழிநடத்தி கோப்பை வென்றுக்கொடுத்த அனுபவம் இருக்கிறது. அணியின் துணைக்கேப்டனாக நட்சத்திர ஆல்ரவுண்டர் அக்ஷர் பட்டேல் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.