என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கிரிக்கெட்
பாக்சிங் டே டெஸ்ட் நாளை தொடக்கம் - ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா மோதல்
- ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நாளை தொடங்குகிறது.
- கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மறுநாள் தொடங்கும் இந்த டெஸ்ட் போட்டி 'பாக்சிங் டே' என்றும் அழைக்கப்படுகிறது.
மெல்போர்ன்:
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. பிரிஸ்பேனில் நடந்த முதலாவது டெஸ்டில் ஆஸ்திரேலியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நாளை தொடங்குகிறது.
கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மறுநாள் தொடங்கும் இந்த டெஸ்ட் போட்டி 'பாக்சிங் டே' என்றும் அழைக்கப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் 'பாக்சிங் டே' நாளான டிசம்பர் 26-ம் தேதி அன்று ஏதாவது ஒரு அணி மெல்போர்னில் ஆஸ்திரேலியாவுடன் விளையாடிக் கொண்டு இருக்கும்.
மெல்போர்னில்... 1950-ம் ஆண்டில் இருந்து ஆஸ்திரேலியாவில் 'பாக்சிங் டே' டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. சில காரணங்களால் சில ஆண்டுகள் அந்த போட்டியை குறிப்பிட்ட நாளில் நடத்த முடியாமல் போய் இருக்கிறது. என்றாலும் 1980-ம் ஆண்டில் இருந்து ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் 'பாக்சிங் டே' டெஸ்ட் போட்டியை நடத்தும் உரிமத்தை ஆஸ்திரேலியா பெற்றுள்ளது.
அந்த வகையில் இந்த முறை 'பாக்சிங் டே'யில் தென் ஆப்பிரிக்க அணி மல்லுக்கட்டுகிறது.
பிரிஸ்பேனில் நடந்த தொடக்க டெஸ்ட் வெறும் 2 நாளுக்குள் முடிந்து போனதால் அது தரமற்ற ஆடுகளம் என்று கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. இதையடுத்து மெல்போர்ன் ஆடுகளம் சர்ச்சைக்கு இடமில்லாமல் மிக நன்றாக அமைய வேண்டும் என்பதில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது.
ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரர் 36 வயதான டேவிட் வார்னருக்கு இது 100-வது டெஸ்டாகும். இந்த மைல்கல்லை எட்டும் 14-வது ஆஸ்திரேலிய வீரர் என்ற சிறப்பை பெறும் அவர் கடந்த 3 ஆண்டுகளாக சதம் அடிக்காத ஏக்கத்தை தணிப்பாரா என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
இந்த மைதானத்தில் தென் ஆப்பிரிக்க அணி 12 டெஸ்டுகளில் விளையாடி 3-ல் வெற்றியும், 7-ல் தோல்வியும், 2-ல் டிராவும் கண்டிருக்கிறது.
இந்திய நேரப்படி நாளை அதிகாலை 5 மணிக்கு தொடங்கும் இந்த டெஸ்ட் போட்டியை சோனி ஸ்போர்ட்ஸ் 2 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்