search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    என்னுடைய வரலாற்று புத்தகத்தில் இது 2-வது இன்னிங்ஸ்: அசலங்கா
    X

    என்னுடைய வரலாற்று புத்தகத்தில் இது 2-வது இன்னிங்ஸ்: அசலங்கா

    • கடைசி பந்தில் இரண்டு ரன்கள் எடுத்து இலங்கை அணியின் வெற்றிக்கு உதவி
    • 47 பந்தில் 49 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் அசத்தல்

    ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் பாகிஸ்தான்- இலங்கை அணிகள் மோதின. இதில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறும் என்பதால் இரு அணிகளும் வெற்றிக்காக போராடின.

    இறுதியாக கடைசி பந்தில் இரண்டு ரன்கள் தேவை என்ற நிலையில், இலங்கை வீரர் அசலங்கா சிறப்பாக விளையாடி இரண்டு ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு உதவியாக இருந்தார். மேலும், அணியை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றார்.

    47 பந்தில் 49 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்த சரித் அசலங்கா, பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டம் குறித்து கூறியதாவது:-

    பீல்டரின் இடையே பந்தை தட்டிவிட்டு எப்படி இரண்டு ரன்களுக்கு கஷ்டப்பட்டு ஓடுவது என்பது குறித்து யோசித்தேன். எதிர்பக்கம் இருந்த பதிரனாவிடமும் கடுமையாக ஓடி இரண்டு ரன்கள் எடுக்க முயற்சிக்க வேண்டும் என்றேன்.

    கடைசி பந்தை பவுன்சர் அல்லது யார்க்கர், அதை தவிர்த்து ஸ்லோவர் பந்தாக வீசுவார் என்று நினைத்தேன். இது எனக்கு ஏற்ற பந்துதான். இதனால் நான் உற்சாகமாக இருந்தேன். மெண்டிஸ்- சதீரா ஆகியோர் சிறப்பாக பேட்டிங் செய்தனர். நான் போட்டியை முடிக்க விரும்பினேன். அது என்னுடைய ரோல். என்னுடைய வரலாற்று சாதனை புத்தகத்தில் இது என்னுடைய 2-வது இன்னிங்ஸ்'' என்றார்.

    Next Story
    ×