என் மலர்

  கிரிக்கெட்

  ஐபிஎல் முதல் சீசனை நினைவுபடுத்தும் மகளிர் பிரீமியர் லீக்... முடிவை மாற்றியமைப்பாரா ஹர்மன்பிரீத் கவுர்?
  X

  ஐபிஎல் முதல் சீசனை நினைவுபடுத்தும் மகளிர் பிரீமியர் லீக்... முடிவை மாற்றியமைப்பாரா ஹர்மன்பிரீத் கவுர்?

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஆண்கள் ஐபிஎல் முதல் சீசனின் இறுதி போட்டியில் நடந்தது போலவே தற்போது மகளிர் பிரீமியர் லீக்கிலும் நடந்துள்ளது.
  • ஐபிஎல் தொடரின் முதல் சீசசின் இறுதிப் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ஆஸ்திரேலிய வீரர் ஷேன் வார்னே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின.

  மகளிர் பிரீமியர் லீக் தொடரின் முதல் சீசன் நாளையுடன் முடிவடைகிறது. பரபரப்பாக சென்ற இந்த தொடரின் இறுதிப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

  அன்று ஆண்கள் ஐபிஎல் முதல் சீசனின் இறுதி போட்டியில் நடந்தது போலவே தற்போது மகளிர் பிரீமியர் லீக்கிலும் நடந்துள்ளது.

  ஐபிஎல் தொடரின் முதல் சீசசின் இறுதிப் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ஆஸ்திரேலிய வீரர் ஷேன் வார்னே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. இந்த போட்டி கடைசிப் பந்து வரை சென்றது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியை வென்று கோப்பையை வென்றது.

  இதே போன்று மகளிர் பிரீமியர் லீக்கில் ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் மெக் லேனிங் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் இறுதிப் போட்டிக்கு சென்றுள்ளது.

  ஆண்கள் ஐபிஎல் முதல் சீசனை வைத்து பார்க்கும் போது ஆஸ்திரேலிய அணியின் மெக் லேனிங் தலைமையிலான அணி வெற்றி பெறுமா? அல்லது இந்திய கேப்டன் கவுர் தலைமையிலான அணி முடிவை மாற்றி அமைக்குமா? என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.

  Next Story
  ×