search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    ஓய்வு முடிவு குறித்து உருக்கமாக பேசிய ஜேம்ஸ் ஆண்டர்சன்
    X

    ஓய்வு முடிவு குறித்து உருக்கமாக பேசிய ஜேம்ஸ் ஆண்டர்சன்

    • ஓய்வு பெறுவதற்கு சரியான நேரம் இதுதான் என நான் நினைக்கிறேன்.
    • என்னுடைய கனவை போல் மற்றவர்களின் கனவுகளும் நனவாகட்டும்.

    சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஓய்வு முடிவை அறிவித்துள்ளார். இங்கிலாந்து அணிக்காக 21 ஆண்டுகளாக விளையாடி வரும் இவர் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக 700 விக்கெட்டுகள் வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

    மேலும், டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முத்தையா முரளீதரன் (800), வார்னே (708) ஆகியோருக்கு அடுத்தப்படியாக இவர் உள்ளார்.

    இந்நிலையில் ஓய்வு முடிவு குறித்து ஆண்டர்சன் உருக்கமாக பேசியதாவது:-

    இந்த கோடைக்காலத்தில் லார்ட்ஸ் மைதானத்தில் விளையாடும் டெஸ்ட் போட்டியே எனது கடைசி போட்டி என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இங்கிலாந்து அணிக்காக விளையாட முடியாது என்பதை நினைத்து வருந்துகிறேன். ஆனால் ஓய்வு பெறுவதற்கு சரியான நேரம் இதுதான் என நான் நினைக்கிறேன். என்னுடைய கனவை போல் மற்றவர்களின் கனவுகளும் நனவாகட்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஜிம்பாப்வே அணிக்கு எதிராக 2003-ம் ஆண்டு டெஸ்ட் போட்டியில் இவர் அறிமுகம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×