search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    விஜயகாந்தும் நானும் நல்ல நண்பர்கள், அரசியல் எங்களை பிரித்துவிட்டது - டி.ராஜேந்தர்
    X

    விஜயகாந்தும் நானும் நல்ல நண்பர்கள், அரசியல் எங்களை பிரித்துவிட்டது - டி.ராஜேந்தர்

    விஜயகாந்த்தும், நானும் நல்ல நண்பர்கள், அரசியல் என்ற ஒன்று எங்களை காயப்படுத்தி இருவரையும் பிரித்துவிட்டது என்று டி.ராஜேந்தர் கூறினார். #TRajendar #Vijayakanth
    நடிகரும், இயக்குநருமான டி.ராஜேந்தர் தந்தி டிவிக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் பேசும்போது,

    சிம்பு வளர்ந்துவிட்டார், அவர் பாதை வேறு, என் பாதை வேறு. சிம்புவின் பலமே அவரது தன்னம்பிக்கை தான். போராட்ட குணம், எதையும் தாங்கக்கூடியவர், கடவுள் நம்பிக்கை கொண்டவர். சிவன் மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருக்கிறார். வலியை மீறி தான் வாழ்க்கையில் வழி இருக்கிறது என்று சொல்லிக் கொடுத்தேன். அதை பிடித்துக் கொண்டார். அன்பு செலுத்துவது தான் சிம்புவின் பலவீனம். சிம்பு பற்றி நிறைய சர்சைகள் வரலாம். சர்ச் இல்லாமல் கிறிஸ்டியானிட்டி வளராது, சர்ச்சை இல்லாமல் யாரும் வளர முடியாது.



    ஒரு நாயகனாக நாயகியை தொட்டதில்லை, இது என்னுடைய பாலிசி. அதைப்போலவே நான் முதலமைச்சராக வேண்டும் என்பதற்காக கட்சி ஆரம்பிக்கவில்லை. யார் முதலமைச்சராக இருந்தாலும் முதுகெலும்புடன் எதிர்க்க வேண்டும் என்பதற்காகத் தான், இதுவரை எதிர்த்து வருகிறேன்.

    என் பையனுக்கு கல்யாணம் ஆகவேண்டும் என்றால், இறைவனை தான் வேண்ட வேண்டும். என் பையன் பெண் பார்க்க சொல்கிறார். நான் எங்கே போய் பெண் பார்க்க முடியும். பார்க்கிறேன், ஆனால் இறைவனாக பார்த்து ஒரு பெண்ணை கொடுக்க வேண்டும். கடவுளை நம்புகிறேன்.

    விஜய், ரஜினிகாந்த்தை சில பத்திரிகைகளில் எவ்வளவு கேவலமாக விமர்சித்திருக்கிறார்கள் தெரியுமா? ஒவ்வொரு நடிகரும் கஷ்டப்பட்டு தான் வந்திருக்கிறார்கள். அதனால் விமர்சனத்தை தாங்க வேண்டும். என்னையே கரடி என்று கிண்டல் செய்தார்கள். இனி என்னை காயப்படுத்த என்ன இருக்கிறது.



    விஜயகாந்த்தும், நானும் நல்ல நண்பர்கள், அரசியல் என்ற ஒன்று எங்களை காயப்படுத்தி இருவரையும் பிரித்துவிட்டது. அவர் சொன்னாரா என்று தெரியவில்லை, அவர் கூறியதாக என் மனசை புண்படுத்திய கருத்து ஒன்றால், அவரை எதிர்த்து நான் பேச வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. நாங்கள் நல்ல நண்பர்கள், அப்படி ஒரு நட்பை பார்க்க முடியாது. ரஜினி, கமல், விஜய் என யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். இவ்வாறு டி.ராஜேந்தர் பேசினார். #TRajendar #Vijayakanth

    டி.ராஜேந்தர் பேசிய வீடியோவை பார்க்க:

    Next Story
    ×