search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    பதவி நீக்கம் போதாது, மேலே இருக்கும் இருவர் பதவி விலக வேண்டும் - கமல்ஹாசன்
    X

    பதவி நீக்கம் போதாது, மேலே இருக்கும் இருவர் பதவி விலக வேண்டும் - கமல்ஹாசன்

    தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் மற்றும் எஸ்.பி இடமாற்றம் போதாது, மேலே இருக்கும் இருவர் பதவி விலக வேண்டும் என்று நடிகர் கமல்ஹாசன் குற்றம்சாட்டியுள்ளார். #Kamalhaasan #BanSterlite #SaveThoothukudi
    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நேற்று முன்தினம் மக்கள் பெருமளவில் திரண்டு கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13-ஆக உயர்ந்துள்ளது.

    மேலும் பலர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வன்முறை, வதந்தி பரவாமல் தடுக்க தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் வருகிற 27-ஆம் தேதி வரை இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது. 

    தூத்துக்குடி சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்.பி பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 

    இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன் பேசும் போது,



    அரசு தரப்பில் யாரும் தூத்துக்குடி மக்களை சந்திக்கவில்லை என்பது எனது குற்றச்சாட்டு. மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்.பி இடமாற்றம் செய்யப்பட்டது குறித்து கேட்ட போது, பதவிநீக்கம் போதாது, மேலே இருக்கும் இருவர், அதாவது முதல்வர், துணை முதல்வர் பதவி விலக வேண்டும். சொல்லப்போனால் அரசே விலக வேண்டும். 

    மக்களை வழிநடத்துவதும், அவர்கள் வாழ்க்கை இன்னும் ஏதாவாக நடத்துவதற்கு உதவி செய்வதற்கே இரு அரசுகளும். ராணுவத்தை அனுப்பி எங்கள் வாழ்க்கையை சரிபடுத்த முற்படுத்துவது, நியாயமான அரசு பரிபாலணமாக இருக்க வாய்ப்பில்லை. என்றார். #Kamalahaasan #BanSterlite #SaveThoothukudi
    Next Story
    ×