என் மலர்

    முன்னோட்டம்

    வலிமை படத்தில் அஜித்
    X
    வலிமை படத்தில் அஜித்

    வலிமை

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    போனிகபூர் தயாரிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் வலிமை படத்தின் முன்னோட்டம்.
    அஜித் நடிப்பில் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் 'வலிமை'. இப்படத்தில் ஹுமா குரேஷி, தெலுங்கு நடிகர் கார்த்திகேயா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். 

    அஜித்-எச்.வினோத்-போனி கபூர் கூட்டணியில் 'நேர்கொண்ட பார்வை' படம் வெளியாகி வருமான ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதன் பிறகு இவர்கள் கூட்டணியில் வெளியாக இருக்கும் இந்த திரைப்படத்தை ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.

    வலிமை படத்தில் அஜித்

    பிப்ரவரி 24ஆம் தேதி வெளியாக இருக்கும் இப்படத்தின் புரமோஷன் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. திரையரங்குகளில் இப்படத்தின் டிக்கெட் முன்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ரசிகர்கள் பலரும் இப்படத்தை பார்ப்பதற்காக திரையரங்குகளில் ஆர்வத்தோடு நீண்ட வரிசையில் காத்திருந்து டிக்கெட்டுகளை வாங்கிச் செல்கின்றனர்.
    Next Story
    ×