என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    நீ ஒரு UnderCover Spy-யா மாறணும் - கிங்டம் படத்தின் தமிழ் டிரெய்லர் ரிலீஸ்!

    • விஜய் தேவரகொண்டா கவுதம் தின்னனுரி இயக்கத்தில் கிங்டம் என்ற படத்தில் நடித்துள்ளார்.
    • திரைப்படம் வருகிற 31-ம் தேதி வெளியாகிறது.

    தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தேவரகொண்டா கவுதம் தின்னனுரி இயக்கத்தில் கிங்டம் என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் பாக்யஸ்ரீ போர்ஸ் கதாநாயகியாக நடித்துள்ளார். அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார்.

    இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. 'கிங்டம்' திரைப்படம் இரண்டு பாகமாக வெளியாகும் என தயாரிப்பாளர் நாக வம்சி தெரிவித்துள்ளார். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி வைரலானது. இப்படம் அதிரடி ஆக்சன் என்டர்டெய்னராக உருவாகியுள்ளது.

    திரைப்படம் வருகிற 31-ம் தேதி வெளியாகிறது.

    இந்நிலையில், விஜய் தேவரகொண்டா நடித்துள்ள 'கிங்டம்' படத்தின் தெலுங்கு டிரெய்லர் நேற்று இரவு வெளியான நிலையில் தற்பொழுது படத்தின் தமிழ் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. ஒரு அண்டர் கவர் ஸ்பையாக விஜய் தேவரகொண்டா நடித்துள்ளார். படத்தின் டிரெய்லர் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    Next Story
    ×