என் மலர்
சினிமா செய்திகள்

World of பராசக்தி.. வைரலாகும் மேக்கிங் வீடியோ!
- ரவிமோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
- "செம்மொழி" என்ற கதையை திருடி தயாரிக்கப்பட்டுள்ளது என வழக்கு நடந்து வருகிறது.
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10-ம் தேதி திரைக்கு வர இருக்கும் படம் 'பராசக்தி'.
இந்தப் படத்தில் ரவிமோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். டான் பிக்சர்ஸ் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் படத்தை தயாரித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் படத்துக்கு இசையமைத்துள்ளார்.
மொழிப் போராட்ட பின்னணியில் இந்த படம் உருவாகி உள்ளது. இந்த படத்தின் மேக்கிங் வீடியோவை வேர்ல்ட் ஆப் பராசக்தி என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.
11 நிமிடங்கள் விரிவாக ஓடும் இந்த இந்த வீடியோ இணையத்தில் கவனம் ஈர்த்து வருகிறது. முன்னதாக இதே தலைப்பில் படக்குழு வள்ளுவர் கோட்டத்தில் கண்காட்சி ஒன்றையும் நடத்தியிருந்தது.
இதற்கிடையே இந்தப் படத்தை வெளியிட தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தனது "செம்மொழி" என்ற கதையை திருடி தயாரிக்கப்பட்டுள்ள இந்த படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என உதவி இயக்குனர் ராஜேந்திரன் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
கதை திருட்டு புகார் தொடர்பாக விசாரித்து வரும் ஜனவரி 2ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.






