என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் முதல் படத்தின் டைட்டில் அப்டேட்
    X

    விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் முதல் படத்தின் "டைட்டில்" அப்டேட்

    ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.

    நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் கடைசியாக ஜனநாயகன் படத்தில் நடித்துள்ளார். இப்படம் வரும் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9ம் தேதி வெளியாகிறது. விஜயின் கடைசி படம் என்பதால், ரசிகர்கள் தீவிர எதிர்பார்ப்பில் உள்ளனர்.

    திரைத்துறையில் இருந்து விலகி அரசியலில் கவனம் செலுத்தி வரும் விஜய், தனது மகனுக்கு திரைத்துறையில் வழிவிட்டுள்ளார்.

    நடிகர் விஜயின் மகன், ஜேசன் சஞ்சய் படம் இயக்குகிறார். தான் இயக்கும் முதல் படத்தில் நடிகர் சந்தீப் கிஷனை முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க வைத்திருக்கிறார்.

    இப்படத்தை லைகா நிறுவவனம் தயாரிக்கிறது. அத்துடன், ஜேசன் சஞ்சயின் தயாரிப்பு நிறுவனமான ஜேஎஸ்கே மீடியா நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.

    இந்நிலையில், ஜேசன் சஞ்சய் இயக்கும் தனது முதல் படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

    அதன்படி, ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தின் தலைப்பு நாளை காலை 10 மணிக்கு வெளியாகும் என படத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

    Next Story
    ×