என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    சசிகுமாருடன் நடிக்கும் விஜய் பட நடிகை
    X

    சசிகுமாருடன் நடிக்கும் விஜய் பட நடிகை

    • கிரைம் திரில்லர் ஜானரில் உருவாகவுள்ள வதந்தி 2 தொடரில் சசிகுமார் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.
    • ஃப்ரீடம் திரைப்படம் ஜூலை 10 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

    சசிகுமார் நடிப்பில் அண்மையில் டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் வெளியாகி மக்களிடையே மிக பெரிய வரவேற்பை பெற்று ப்ளாக்பஸ்டர் திரைப்படமாக அமைந்தது. இதைத்தொடர்ந்து அடுத்து ஃப்ரீடம் திரைப்படம் ஜூலை 10 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

    அதனை தொடர்ந்து சசிகுமார் கடந்த 2022-ம் வெளியான 'வதந்தி' வெப் தொடரின் இரண்டாவது சீசனில் நடிக்க உள்ளார். வதந்தி தொடரின் முதல் சீசனில், எஸ்.ஜே.சூர்யா, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி மற்றும் லைலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

    கிரைம் திரில்லர் ஜானரில் உருவாகவுள்ள வதந்தி 2 தொடரில் சசிகுமார் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இந்த தொடரின் படப்பிடிப்பு பணிகள் ஏற்கனவே தொடங்கிவிட்டது. மேலும், படப்பிடிப்பு பணிகளை மதுரை, திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் நடத்த படக்குழு திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் படத்தில் அபர்ணா தாஸ் இணைந்துள்ளதாக சமீபத்தில் கலந்துக் கொண்ட நேர்காணலில் கூறியுள்ளார்.

    அபர்ணா தாஸ் இதற்கு முன் பீஸ்ட், டாடா போன்ற வெற்றி திரைப்படங்களில் நடித்தது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×