என் மலர்
சினிமா செய்திகள்

'அண்ணா... அண்ணா' என்று பாசமாக அழைத்த சிறுமி... விஜயின் லேட்டஸ்ட் வீடியோ வைரல்
- இப்படம் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் திரைக்கு வர உள்ளதாக கூறப்படுகிறது.
- படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
எச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் 'ஜனநாயகன்'. இப்படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜூ, பிரியாமணி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். அனிருத் இசையமைக்கும் இப்படத்தின் போஸ்டர் சமீபத்தில் வெளியான நிலையில், காதலர் தினத்தன்று 'ஜனநாயகன்' படத்தின் முதல் பாடல் வெளியாக இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.
ஏற்கனவே விஜய் நடித்த கத்தி, மாஸ்டர், பீஸ்ட், லியோ போன்ற படங்களில் சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்த அனிருத் இந்த படத்திற்கும் இசையமைத்திருப்பதால் இந்த முதல் பாடல் விஜய் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதனிடையே, இப்படம் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் அல்லது 2026-ம் ஆண்டு ஜனவரி மாதம் பொங்கலுக்கு திரைக்கு வர உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், படப்பிடிப்புக்காக காரில் செல்லும் நடிகர் விஜயை காண சாலையோரம் சிறுவர்கள் கூடினர். அப்போது காரில் சென்ற நடிகர் விஜயை 'அண்ணா... அண்ணா' என்று சிறுமி அழைக்க கார் மெல்ல செல்ல சிறுமி ஒருவர் விஜய்க்கு பரிசு வழங்கினார். அதை விஜய் புன்னகையுடன் பெற்றுக்கொண்டு சென்றார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.






