விஜயின் கோட் படம்: 2-வது சிங்கில் அப்டேட் வெளியீடு

இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தை ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரித்துள்ளது.
விஜயின் கோட் படம்: 2-வது சிங்கில் அப்டேட் வெளியீடு
Published on

நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகி இருக்கும் படம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (கோட்). யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இந்த படத்தின் முதல் பாடல் "விசில் போடு" ஏற்கனவே வெளியாகிவிட்டது. இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களையே பெற்றது.

இந்த நிலையில், கோட் படத்தின் இரண்டாவது பாடல், "சின்ன சின்ன கண்கள்" நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. மேலும் இந்த பாடலை நடிகர் விஜய் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நாளை நடிகர் விஜயின் 50-வது பிறந்த நாளை ஒட்டி இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

கோட் படம் செப்டம்பர் 5 ஆம் வெளியாக இருக்கிறது. ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் பிரசாந்த், பிரபு தேவா, மீனாட்சி சவுத்ரி ஆகியோர் நடித்துள்ளனர். டைம் டிராவல் தொடர்பான கதையம்சம் கொண்ட கோட் படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com