மதராஸி : Salambala பாடல் வீடியோ வெளியீடு!

மதராஸி படத்தை பார்த்த பல திரைப்பிரபலங்கள் பாராட்டி சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர்.
மதராஸி : Salambala பாடல் வீடியோ வெளியீடு!
Published on

பிரபல இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் 'மதராஸி' திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. திரைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ருக்மிணி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வல், பிஜு மேனன், டான்சிங் ரோஸ் சபீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார்.

படத்தை பார்த்த பல திரைப்பிரபலங்கள் பாராட்டி சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். படத்தில் இடம் பெற்ற சலம்பல பாடல் ஹிட்டானது. பலரும் அதில் வரும் ஹூக் ஸ்டெப்பை இணையத்தில் ரீல்ஸாக பதிவிட்டனர். இந்நிலையில் சலம்பல பாடலின் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com