என் மலர்
சினிமா செய்திகள்

வட்டகானல்- திரைவிமர்சனம்
கொடைக்கானல் மலைப்பகுதி கிராமமான 'வட்டகானல்' பகுதியில் விளையும் போதை காளானை விற்று போதை சாம்ராஜ்யத்தை நடத்தி வருகிறார் ஆர்.கே.சுரேஷ். அவருக்கு உறுதுணையாக துருவன் மனோ, விஸ்வந்த், சரத் ஆகியோர் இருந்து வருகின்றனர். ஒரு பிரச்சனையில் கணவனை இழந்த வித்யா பிரதீப், ஆர்.கே.சுரேசை கொலை செய்வதற்கு முயற்சி செய்து வருகிறார்.
இறுதியில் ஆர்.கே.சுரேசை வித்யா பிரதீப் கொலை செய்தாரா? வித்யா பிரதீப் கணவர் எப்படி இறந்தார்? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
படத்தில் நாயகனாக நடித்து இருக்கும் ஆர்.கே.சுரேஷ் கதாபாத்திரத்திற்கு தகுந்தாற்போல் தனது உடல்மொழியோடு அற்புதமான நடிப்பை கொடுத்துள்ளார். படத்தின் கதாநாயகனான துருவன் மனோ நடிப்பு நேர்த்தியாக அமைந்து உள்ளது.
இளமையும் அழகுமாக மீனாட்சி கோவிந்தராஜன் நடிப்பு ரசிக்க வைக்கிறது. விஷ்வந்த், வித்யா பிரதீப் நடிப்பு படத்துக்கு கூடுதல் பலம்.
இயக்கம்
போதை காளான் பற்றிய கதையை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் பித்தாக் புகழேந்தி. காளான் பாதிப்பு குறித்த வலுவான காட்சிகள் இல்லை. எதுக்கு சண்டைபோடுகிறார்கள், யார் போடுகிறார்கள், என்ன நடக்கிறது என பல இடங்களில் திரைக்கதை குழப்பம். சுவாரசியமான காட்சிகள் மற்றும் தெளிவான திரைக்கதை இருந்திருந்தால் ரசித்து இருக்கலாம்.
இசை
மாரிஸ் விஜய் இசையில் பாடல்கள் பெரியதாக ஒர்க்கவுட் ஆகவில்லை. பின்னணி இசையில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்.
ஒளிப்பதிவு
எம்.ஏ.ஆனந்த் ஒளிப்பதிவை ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது.






