என் மலர்
சினிமா செய்திகள்

இனி என்ன நடந்தாலும் நான் பொறுப்பு இல்ல... வெளியானது 'வா வாத்தியார்' டிரெய்லர்
- சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
- நடிகர் ராஜ் கிரண் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
நலன் குமாரசாமி இயக்கத்தில் "வா வாத்தியார்" படத்தில் நடித்து முடித்துள்ளார் கார்த்தி. கதாநாயகியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார். இவர் தமிழில் எல்ஐகே, ஜீனி ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
கார்த்தியின் 26-வது படம் இதுவாகும். இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்க சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். சத்யராஜ் இப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார். மேலும் நடிகர் ராஜ் கிரண் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
'வா வாத்தியார்' திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியாகும் என படக்குழு அறிவித்து இருந்தது. ஆனால் தவிர்க்க முடியாத காரணத்தால் நேற்று வெளியாகவில்லை.
இந்த நிலையில், 'வா வாத்தியார்' திரைப்படம் வருகிற 12-ந்தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என போஸ்டர் வெளியிட்டு படக்குழு தெரிவித்து உள்ளது. மேலும் படத்தின் டிரெய்லரையும் படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி தீவிர எம்ஜிஆர் ரசிகரும், போலீஸ் அதிகாரியுமான கார்த்தி எதிர்கொள்ளும் சவால்களை மையமாக கொண்டு 'வா வாத்தியார்' எடுக்கப்பட்டுள்ளது.






