என் மலர்
சினிமா செய்திகள்

U/A சென்சார் பெற்ற 'வா வாத்தியார்' ?
- தீவிர எம்ஜிஆர் ரசிகரும், போலீஸ் அதிகாரியுமான கார்த்தி எதிர்கொள்ளும் சவால்களை மையமாக கொண்டு ‘வா வாத்தியார்’ எடுக்கப்பட்டுள்ளது.
- ‘வா வாத்தியார்’ திரைப்படம் கடந்த மாதமே உலகம் முழுவதும் வெளியாகும் என படக்குழு அறிவித்து இருந்தது.
நலன் குமாரசாமி இயக்கத்தில் "வா வாத்தியார்" படத்தில் நடித்து முடித்துள்ளார் கார்த்தி. கதாநாயகியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார். இவர் தமிழில் எல்ஐகே, ஜீனி ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
கார்த்தியின் 26-வது படமான இதனை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ளது. சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.சத்யராஜ் இப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார். மேலும் நடிகர் ராஜ் கிரண் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தீவிர எம்ஜிஆர் ரசிகரும், போலீஸ் அதிகாரியுமான கார்த்தி எதிர்கொள்ளும் சவால்களை மையமாக கொண்டு 'வா வாத்தியார்' எடுக்கப்பட்டுள்ளது.
'வா வாத்தியார்' திரைப்படம் கடந்த மாதமே உலகம் முழுவதும் வெளியாகும் என படக்குழு அறிவித்து இருந்தது. ஆனால் தவிர்க்க முடியாத காரணத்தால் வெளியாகவில்லை.
இந்த நிலையில், 'வா வாத்தியார்' திரைப்படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாக உள்ளது. இதனை தொடர்ந்து படம் வெளியாகும் தேதி குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, விஜய் நடித்துள்ள 'ஜன நாயகன்', சிவகார்த்திகேயனின் 'பராசக்தி' படங்களுக்கு இதுவரை தணிக்கை சான்றிதழ் வழங்காதது குறிப்பிடத்தக்கது.






