என் மலர்
சினிமா செய்திகள்

காதலில் நல்ல காதல் கள்ளக்காதல் என்று எதுவுமில்லை - சேரன் சொன்ன இலக்கணம்
- நூல் வெளியீட்டு விழாவில் சேரன் பங்கேற்றார்.
- பொறாமை படுபவர்கள்தான் அடுத்தவர்களுடைய காதலை கள்ளக்காதல் என்று சொல்வார்கள்.
இயக்குனரும் நடிகருமான சேரன் தனது வெளிப்படையான கருத்துகளுக்கு பெயர் பெற்றவர் ஆவார்.
அண்மையில் சேலத்தைச் சேர்ந்த ஹோமியோபதி மருத்துவர் சசிகுமார் எழுதிய 'கன்னக் குழியில் விழுந்த கண்கள்' என்ற கவிதை நூல் வெளியீட்டு விழாவில் சேரன் பங்கேற்றார்.
அதில் பேசிய அவர், "பெண்ணைத்தான் காதலிக்க வேண்டும் என்று இல்லை. நாம் ஒரு உயிர் மேல் வைக்கும் அன்பு தான் காதல். பெண்கள் மீது மட்டுமே காதல் என்பது கொச்சையானது. காதலில் நல்ல காதல் கள்ளக்காதல் என்று ஏதுமில்லை.
சமூகம் நம் மீது செலுத்தும் ஆதிக்கம்தான் கள்ளக்காதல். நமக்கு இது கிடைக்கலையே.. நம்மால் இதுபோல காதலிக்க முடியலையே! என்று பொறாமை படுபவர்கள்தான் அடுத்தவர்களுடைய காதலை கள்ளக்காதல் என்று சொல்வார்கள்.
அதனால் அனைவரும் வாழ்க்கையின் சுமைகளை விட்டு யாரை காதலிக்க வேண்டும் என்று தோன்றுகிறதோ காதலித்து விடுங்கள்" என்றார்.






