என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    1 கோடி இதயங்களை கவர்ந்த ரெட்ரோ படத்தின் டிரெய்லர்
    X

    1 கோடி இதயங்களை கவர்ந்த ரெட்ரோ படத்தின் டிரெய்லர்

    • நடிகர் சூர்யா அவரது 44- வது திரைப்படமாக ரெட்ரோ திரைப்படத்தில் நடித்துள்ளார்.
    • ரெட்ரோ படம் வருகிற மே 1-ம் தேதி வெளியாகவுள்ளது.

    நடிகர் சூர்யா அவரது 44- வது திரைப்படமாக ரெட்ரோ திரைப்படத்தில் நடித்துள்ளார். இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார்.

    இந்த படத்தை சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். ரெட்ரோ படம் வருகிற மே 1-ம் தேதி வெளியாகவுள்ளது.

    படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைப்பெற்றது. படத்தின் டிரெய்லர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. டிரெய்லர் இதுவரை 10 மில்லியன் பார்வைகளை யூடியூபில் கடந்துள்ளது. திரைப்படத்தின் மீதுள்ள எதிர்ப்பார்ப்பு நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.

    Next Story
    ×