என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    The Game:ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கும்  புதிய நெட்பிளிக்ஸ் வெப் தொடர்
    X

    The Game:ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கும் புதிய நெட்பிளிக்ஸ் வெப் தொடர்

    நெட்ஃப்ளிக்ஸ் தனது 2025ஆம் ஆண்டின் முதல் தமிழ் தொடர் வெளியீட்டை அறிவித்துள்ளது.

    நெட்ஃப்ளிக்ஸ் தனது 2025ஆம் ஆண்டின் முதல் தமிழ் தொடர் வெளியீட்டை அறிவித்துள்ளது. வரவிருக்கும் இந்த மிஸ்ட்ரி த்ரில்லர் தொடரான The Game: You Never Play Alone வில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார் ஷ்ரத்தா ஸ்ரீநாத். இத்தொடரை தீப்தி கோவிந்தராஜன் எழுத்தில் ராஜேஷ் எம் செல்வா இயக்கியுள்ளார். Applause Entertainment – Netflix India இணந்து இத்தொடரை தயாரித்துள்ளது.

    ஸ்ரத்தா ஸ்ரீநாத் உடன் சாந்தோஷ் பிரதாப், சந்தினி, சயமா ஹரிணி, பாலா ஹசன், சுபாஷ் செல்வம், விவியா சாந்த், தீராஜ் மற்றும் ஹேமா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    நாம் வாழும் டிஜிட்டல் உலகின் இருண்ட பக்கங்களை வெளிச்சத்துக்கு கொண்டு வரும் கதையாக இது இருக்கும் என தயாரிப்பாளர்கள் விளக்கியுள்ளனர்.

    ஸ்ரத்தா ஸ்ரீநாத் ஒரு பெண் கேம் டெவலப்பர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவர் எதிர்கொள்ளும் மர்மமான டிஜிட்டல் தாக்குதலை கண்டறியும் முயற்சி தான் தொடரின் முக்கிய அம்சம். இந்த தொடர் அக்டோபர் 2, 2025 அன்று Netflix-ல் வெளியாகிறது.

    Next Story
    ×