என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    இயக்குநர் ராமின் `பறந்து போ பட  டீசர் ரிலீஸ் அறிவிப்பு
    X

    இயக்குநர் ராமின் `பறந்து போ' பட டீசர் ரிலீஸ் அறிவிப்பு

    • இயக்குநர் ராம் 'பறந்து போ' என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
    • அஜு வர்கீஸ் இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகிறார்.

    கற்றது தமிழ், தங்க மீன்கள், பேரன்பு, தரமணி உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கியவர் இயக்குனர் ராம். இவர் தற்போது 'பறந்து போ' என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

    இதில், மிர்ச்சி சிவா கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும், அஞ்சலி, கிரேஸ் ஆண்டனி, அஜு வர்கீஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மலையாள நடிகரான அஜு வர்கீஸ் இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகிறார்.

    இப்படத்திற்கு, சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ளார். யுவன் பின்னணி இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற ஜூலை மாதம் 4-ம் தேதி வெளியாகிறது. படத்தின் டீசர் ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது. படத்தின் டீசர் வரும் ஜூன் 4 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

    Next Story
    ×