search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    8 வருடம் முயற்சி செய்தும் அஜித் சாரை சந்திக்க முடியவில்லை - பிரபல இயக்குனர் குமுறல்
    X

    8 வருடம் முயற்சி செய்தும் அஜித் சாரை சந்திக்க முடியவில்லை - பிரபல இயக்குனர் குமுறல்

    • இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் ‘கோல்டு’.
    • இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

    'நேரம்' படத்தின் மூலம் தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் அல்போன்ஸ் புத்திரன். அதை தொடர்ந்து பிரேமம்' படத்தை இயக்கி இருந்தார். கடந்த 2015-ம் ஆண்டு மலையாளத்தில் மட்டுமே வெளியான பிரேமம்', தமிழ் ரசிகர்களிடையேயும் மாபெரும் வரவேற்பை பெற்றது.


    கோல்டு

    'பிரேமம்' படம் அல்போன்ஸ் புத்திரனுக்கு மலையாள திரையுலகிலும், தமிழ் திரையுலகிலும் பெரிய பெயரை பெற்றுக்கொடுத்தது. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கிட்டத்தட்ட 7 ஆண்டுகளுக்கு பிறகு இவர் இயக்கியுள்ள திரைப்படம் 'கோல்டு'. பிரித்விராஜ் கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார். அதீத எதிர்பார்ப்புகளுடன் கடந்த டிசம்பர் 1-ஆம் தேதி வெளியான இப்படம் பல விமர்சனங்களை சந்தித்தது.


    அல்போன்ஸ் புத்திரன்

    அல்போன்ஸ் புத்திரனிடம் சமூக வலைதளத்தின் வாயிலாக ரசிகர் ஒருவர், "அஜித்துடன் ஒருப்படம் பண்ணுங்க தலைவா" என கேள்விக்கு எழுப்பினார். இதற்கு பதிலளித்த அல்போன்ஸ், அஜித் சாரை இதுவரைக்கும் மீட் பண்ண முடியல. நிவின் ஒருமுறை அஜித் சாருக்கு பிரேமம் படம் பிடித்துள்ளதாக கூறியிருந்தார். பிறகு, நான் ஒரு 10 முறை அவரின் வலதுக்கை மற்றும் மேலாளரிடம் அஜித் சாரை சந்திக்க வேண்டி கேட்டு இப்போது 8 வருஷம் ஆகிறது. எனக்கு வயதாவதற்குள்ளாக அஜித் சாரை பார்த்தால் படம் பண்ணுவேன்.

    ஒவ்வொரு முறையும் நீங்கள் இந்த கேள்வியை கேட்கும்போது எனக்கு எவ்வளவு வலிக்கும் தெரியுமா தம்பி? முயற்சி செய்து செய்து சோர்வடைந்து விட்டேன். நீங்கள் கேட்கும்போது முதலில் கோவம் வரும். பின்னர் நீங்களும் என்னை மாதிரி ஒரு ஏகே ரசிகரென நினைத்து அமைதியாக கடந்து விடுவேன். ஏகே சாரை வைத்து படம் எடுத்தால் ஹாலிவுட், கோலிவுட் திரையரங்குகளில் படம் 100 நாள் ஓடும். இதே மாதிரிதான் உலகநாயகன், சூப்பர் ஸ்டார், தளபதியுடனும் என கூறினார். இவரின் இந்த பதில் ரசிகர்களிடம் ஆதரவை பெற்று பலரும் விரைவில் அஜித் சாரை சந்திப்பீர்கள் என கூறிவருகின்றனர்.

    Next Story
    ×