என் மலர்

  சினிமா செய்திகள்

  திருமண நாளை முன்னிட்டு குழந்தைகளின் புகைப்படத்தை வெளியிட்ட விக்னேஷ் சிவன்
  X

  குழந்தைகளுடன் நயன்தாரா

  திருமண நாளை முன்னிட்டு குழந்தைகளின் புகைப்படத்தை வெளியிட்ட விக்னேஷ் சிவன்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • நயன்தாரா- விக்னேஷ் சிவன் கடந்த ஜூன் 9-ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர்.
  • இவர்கள் வாடகைத் தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளுக்கு பெற்றோராகியுள்ளனர்.

  தென்னிந்திய திரைத்துறையில் தனக்கென்று தனி முத்திரை பதித்தவர் நடிகை நயன்தாரா. சொந்த வாழ்க்கையில் அடுக்கடுக்காக சர்ச்சைகளில் சிக்கியபோதிலும் அதை தகர்த்தெரிந்து ரசிகர்களின் மனதில் நீங்க இடத்தை பிடித்தவர். விக்கேனஷ் சிவன் இயக்கிய நானும் ரவுடி தான் படத்தில் நடித்தபோது இருவருக்கும் காதல் மலர்ந்தது.


  அதன்பின்னர், நீண்ட ஆண்டுகளாக காதலித்து வந்த இயக்குனர் விக்னேஷ் சிவன் - நயன்தாரா இருவீட்டாரின் சம்மதத்துடன் கடந்த ஆண்டு ஜூன் 9-ம் தேதி திருமணம் செய்துக் கொண்டனர். திருமணம் முடிந்த சில மாதங்களில் இரட்டை குழந்தை பிறந்ததாக சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தினர். இந்த விஷயம் சர்ச்சையாகி பூதாகரமாக வெடித்தது. பிறகு, சட்ட விதிப்படி வாடகைத் தாய் மூலம் தாங்கள் இரட்டை ஆண் குழந்தைகளுக்கு பெற்றோராகி இருப்பதாக தெரிவித்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தனர்.


  உயிர் மற்றும் உலக்

  நயன்தாரா- விக்னேஷ் சிவன் இன்று தங்களது முதலாம் ஆண்டு திருமணநாளை கொண்டாடி வருகின்றனர். இவர்களுக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நயன்தாரா- விக்னேஷ் சிவனின் இரட்டை குழந்தைகளான உயிர் மற்றும் உலக்-கின் தற்போதைய புகைப்படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இதற்கு ரசிகர்கள் லைக்குளை குவித்து வருகின்றனர்.


  Next Story
  ×