என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா செய்திகள்

இன்ஸ்டாவில் கணக்கு தொடங்கிய நயன்தாரா.. இரட்டைக் குழந்தைகளுடன் அசத்தல் எண்ட்ரி

- நடிகை நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார்.
- இவர்களுக்கு உயிர் ருத்ரோ நீல் - உலக் தெய்வக் என்ற இரட்டை ஆண் குழந்தைகள் உள்ளன.
தமிழ் திரையுலகின் பிரபல நடிகையான நயன்தாரா, ரஜினி, விஜய், சூர்யா என பல நடிகர்களுடன் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவர் தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், இந்தி என பல மொழி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் உருவாகியுள்ள 'ஜவான்' திரைப்படம் செப்டம்பர் 7-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
நயன்தாரா- விக்னேஷ் சிவன் கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு வாடகைத் தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தன. தொடர்ந்து குழந்தைகளை கவனித்து வரும் நயன்தாரா சமூக வலைதளத்தில் நாட்டம் இல்லாமல் இருந்தார். இவர்களின் மகிழ்ச்சிகரமான தருணங்களை இயக்குனர் விக்னேஷ் சிவன் மட்டுமே தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்து வந்தார்.
நயன்தாரா பதிவு
இந்நிலையில், நயன்தாரா தற்போது அதிகாரப்பூர்வமான இன்ஸ்டாகிராம் கணக்கை தொடங்கியுள்ளார். இதில் முதல் பதிவாக தனது குழந்தைகள் உயிர் ருத்ரோ நீல் - உலக் தெய்வக் ஆகியோருடன் இருக்கும் வீடியோவை பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவை சமூக வலைதளத்தில் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.