search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    தியேட்டர்ல சந்திப்போம்.. படப்பிடிப்பை நிறைவு செய்த ஜிகர்தண்டா 2 படக்குழு
    X

    தியேட்டர்ல சந்திப்போம்.. படப்பிடிப்பை நிறைவு செய்த "ஜிகர்தண்டா 2" படக்குழு

    • நீண்ட இடைவேளைக்கு பிறகு ஜிகர்தண்டா 2 படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்கி வருகிறார்.
    • இதில் எஸ்.ஜே.சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர்.

    கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் 2014-ம் ஆண்டு மதுரையை களமாக கொண்டு உருவாகிய படம் "ஜிகர்தண்டா". சித்தார்த் கதாநாயகனாக நடித்த இந்த படத்தில் லட்சுமி மேனன் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் பாபி சிம்ஹா நடித்திருந்தார். இந்த படத்துக்காக 2014-ம் ஆண்டின் தேசிய விருதை பாபி சிம்ஹா பெற்றார்.



    8 வருடங்களுக்கு பிறகு ஜிகர்தண்டா படத்தின் இரண்டாம் பாகம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் எஸ்.ஜே.சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி பலரையும் கவர்ந்தது.



    இந்நிலையில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழு வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது. மேலும் கேக் வெட்டி தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். அதில், தியேட்டரில் சந்திப்போம் என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.



    Next Story
    ×