என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    முத்தப் பிச்சை கேட்கும் கவுதம் மேனன்.. வைரலாகும் பதிவு
    X

    முத்தப் பிச்சை கேட்கும் கவுதம் மேனன்.. வைரலாகும் பதிவு

    • தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனராக இருப்பவர் கவுதம் மேனன்.
    • இவர் தற்போது ‘லியோ’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

    மின்னலே படத்தின் மூலம் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமானவர் கவுதம் மேனன். அதன்பின் காக்கா காக்க, வேட்டையாடு விளையாடு, வாரணம் ஆயிரம், விண்ணைத் தாண்டி வருவாயா, என்னை அறிந்தால், அச்சம் என்பது மடமையடா உள்ளிட்ட படங்களை இயக்கி ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்தார்.



    தொடர்ந்து சிம்பு நடிப்பில் இவர் இயக்கிய 'வெந்து தணிந்தது காடு' திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. கவுதம் மேனன் இயக்குனராக மட்டுமல்லாமல் நடிகராகவும் வலம் வருகிறார். தற்போது இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் 'லியோ' திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

    இந்நிலையில், கவுதம் மேனன் தற்போது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவு வைரலாகி வருகிறது. அதில், "முத்தப் பிச்சை..." என்று பதிவிட்டுள்ளார். இதற்கு ரசிகர்கள் அடுத்த படத்தின் தலைப்பா? இல்லை லியோ? அப்டேட்டா என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.




    Next Story
    ×