என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    சந்திரமுகி -2 படக்குழுவை வாழ்த்திய ரஜினி- ஏன் தெரியுமா?
    X

    சந்திரமுகி -2 படக்குழுவை வாழ்த்திய ரஜினி- ஏன் தெரியுமா?

    • ராகவா லாரன்ஸ் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘சந்திரமுகி 2’.
    • இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் உருவான திரைப்படம் 'சந்திரமுகி 2'. இப்படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். கங்கனா ரனாவத் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் வடிவேலு, ராதிகா உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் இதில் நடித்திருக்கின்றனர்.


    லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு எம்.எம் கீரவாணி இசையமைத்துள்ளார். 'சந்திரமுகி 2' திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் செப்டம்பர் 28-ஆம் தேதி பிரமாண்டமாக திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.


    இந்நிலையில், 'சந்திரமுகி 2' படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்து நடிகர் ரஜினிகாந்த் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், "மிகப்பெரிய வெற்றி படமான தன்னுடைய சந்திரமுகியை.. புதிதாக, வேறு ஒரு கோணத்தில், ஒரு பிரம்மாண்ட பொழுதுபோக்குப் படமாக, சினிமா ரசிகர்களுக்கு தந்திருக்கும் நண்பர் திரு. வாசு அவர்களுக்கும்.. அருமையாக நடித்திருக்கும் தம்பி ராகவா லாரன்ஸ் அவர்களுக்கும்.. மற்றும் படகுழுவினர் அனைவருக்கும் என்னுடைய நல்வாழ்த்துக்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.


    Next Story
    ×