search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    அரசியல் உலகம் ஒரு நல்ல மனிதரை இழந்துவிட்டது- சிவகுமார் இரங்கல்
    X

    அரசியல் உலகம் ஒரு நல்ல மனிதரை இழந்துவிட்டது- சிவகுமார் இரங்கல்

    • வெண்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை பெற்று வந்த விஜயகாந்த் இன்று காலமானார்.
    • இவரது மறைவிற்கு திரையுலகினர், அரசியல் தலைவர்கள் என பலர் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

    90-களில் ஆக்ஷன் ஹீரோவாக வலம் வந்தவர் விஜயகாந்த். இவர் பல படங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர். 'கேப்டன்' என்று மக்களால் அன்போடு அழைக்கப்படும் விஜயகாந்த் நடிகராக மட்டுமல்லாமல் மனிதநேயம் மிக்கவராகவும் இருந்தார். மக்கள் பலருக்கு தன்னால் இயன்ற பல உதவிகளை செய்தார். இவர் தேமுதிக கட்சியின் தலைவராகவும் இருந்தார்.

    இதையடுத்து நடிகர் விஜயகாந்த் நேற்று முன்தினம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து, இவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதால் வெண்டிலேட்டர் சிகிச்சை அளிக்கப்பட்டது.


    விஜயகாந்தின் உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். இதையடுத்து மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதால் வெண்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை பெற்று வந்த விஜயகாந்த் இன்று காலமானார். இவரது மறைவிற்கு திரையுலகினர், அரசியல் தலைவர்கள் என பலர் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், விஜயகாந்திற்கு இரங்கல் தெரிவித்து நடிகர் சிவகுமார் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "தமிழக அரசியலில் எம்.ஜி.ஆரை அடுத்து நம்பிக்கையான ஒரு தலைவராக உருவாகிக் கொண்டிருந்தவர்.. ஆயிரக்கணக்கில் ரசிகர்களை மாதம் ஒருமுறை நேரில் சந்தித்ததை கோபிசெட்டிப்பாளையத்தில் நடைபெற்ற படப்பிடிப்பில் பார்த்துள்ளேன். தி.நகர் ரோகிணி லாட்ஜில் உள்ள தன் அறையில் நண்பர்களை தங்கவிட்டு படப்பிடிப்பு முடிந்து வந்து வெராண்டாவில் படுத்துக்கொள்வார். எளிமையானவர், நேர்மையானவர்.



    நடிகர் சங்க தலைவராக அவர் இருந்த போது கமல், ரஜினியை கலைநிகழ்ச்சிக்காக மலேசியாவுக்கு அழைக்கச்சென்று அவர்கள் கரம் பற்றி வேண்டிக்கொண்டவர். 'சாமந்திப்பூ' -படத்தில் சிறு வேடத்தில் என்னோடு நடித்தார். 'புதுயுகம்' - படத்தில் என் உயிர் நண்பனாக நடித்தார்.. கலையுலகம், அரசியல் உலகம் ஒரு நல்ல மனிதரை இழந்துவிட்டது. சூர்யா, கார்த்தியுடன் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

    Next Story
    ×