என் மலர்
சினிமா செய்திகள்

விஜயகாந்தை நேரில் சென்று வாழ்த்திய கார்த்தி
- நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்கம் முன்னாள் தலைவருமான விஜயகாந்த் தனது 70 வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார்.
- இவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் நடிகர் கார்த்தி நேரில் சென்று அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்கம் முன்னாள் தலைவருமான விஜயகாந்த் தனது 70 வது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார். இவரின் பிறந்தநாளில் ரசிகர்கள், கட்சி தொண்டர்கள் என பலரும் நலத்திட்ட உதவிகள், ரத்த தானம் வழங்குதல் போன்ற நிகழ்ச்சிகளை முன்னெடுத்து நடத்தி வருகின்றனர். மேலும் விஜயகாந்திற்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு ஓய்வு எடுத்து வந்த விஜயகாந்த் கட்சி அலுவலகத்துக்கு வருவாரா? அவரை பார்க்க முடியுமா என்று தொண்டர்கள் ஆர்வத்துடன் இருந்த நிலையில், கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு வந்து தொண்டர்கள் முன் உற்சாகமாக கைகளை அசைத்ததோடு வெற்றியை குறிக்கும் வகையில் பெரு விரலையும் வளைத்து காட்டி அனைவரையும் சந்தோஷப்படுத்தினார்.
இந்நிலையில் விஜயகாந்த்திற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கும் வகையில் நடிகர் சங்கம் சார்பில், பொருளாளர் கார்த்தி நேரில் சென்று மலர்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். இவருடன் சங்க செயற்குழு உறுப்பினர்கள் பிரேம்குமார், ஹேமசந்திரன் ஆகியோர் இருந்தனர்.