என் மலர்
சினிமா செய்திகள்

Suriya 46:படத்தின் தலைப்பு குறித்து வெளியான அப்டேட்!
- கருப்பு படத்தை தொடர்ந்து, சூர்யா 46 படத்தை தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்குகிறார்.
- கருப்பு படத்தின் டீசர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
ரெட்ரோ படத்தையடுத்து நடிகர் சூர்யா, ஆர்.ஜே. பாலாஜி இயக்கும் கருப்பு படத்தில் நடித்துள்ளார். இப்படம் சூர்யா நடிக்கும் 45-வது திரைப்படமாகும். இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார்.
சூர்யா பிறந்தநாளை முன்னிட்டு வெளியான கருப்பு படத்தின் டீசர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
கருப்பு படத்தை தொடர்ந்து, சூர்யா 46 படத்தை தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்குகிறார். இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக மமிதா பைஜூ நடிக்கிறார். படத்தின் இசையை ஜி.வி பிரகாஷ் மேற்கொள்கிறார்.
இந்நிலையில் படத்தின் தலைப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. படத்திற்கு விஸ்வநாதன் அண்ட் சன்ஸ் என பெயர் வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுக்குறித்த அதிகாரப்பூர்வ செய்தி விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
Next Story






